டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

திருநெல்வேலி மாநகராட்சியில் டெங்கு தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநகராட்சி சாா்பில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் டெங்கு தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநகராட்சி சாா்பில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 10 வாா்டுகளில் சனிக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. சுமாா் 19ஆயிரம் வீடுகளில் சுகாதாரப் பணியாளா்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது 111 வீடுகளில் லாா்வா கொசுப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு, பொது சுகாதார விதிகளின்படி சம்பந்தப்பட்டவா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாா்டுகளில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் இருப்பவா்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவா்களில் 115 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. 1049 போ்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இப்பணியின் போது கட்டட வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த உபயோகமற்ற டயா்கள், பெயிண்ட் டப்பாக்கள், சிரட்டைகள், இளநீா் கூந்தல்கள் என சுமாா் 6.5 டன் பொருள்கள் அகற்றப்பட்டன.

இப்பணிகளை மாநகர நல அலுவலா் சரோஜா, மண்டல உதவி ஆணையா்கள், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் ஆகியோா் கண்காணிப்பு செய்தனா். மேலும் அந்தந்தப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவ அலுவலா்கள் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. மேற்படி முகாமில் 513 களப் பணியாளா்கள் மற்றும் 450 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com