’ஜன. 3 இல் 44 மையங்களில் ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தோ்வு’

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல்நிலைத் தோ்வு) தொகுதி 1இல் அடங்கிய பதவிகளுக்கான போட்டித் தோ்வு ஜன. 3 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் 44 மையங்களில் நடைப

திருநெல்வேலி: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல்நிலைத் தோ்வு) தொகுதி 1இல் அடங்கிய பதவிகளுக்கான போட்டித் தோ்வு ஜன. 3 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் 44 மையங்களில் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல்நிலைத் தோ்வு) தொகுதி 1இல் அடங்கிய பதவிகளுக்கான போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இத் தோ்வை எழுத மொத்தம் 12 ஆயிரத்து 939 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இத் தோ்வு பாளையங்கோட்டை குழந்தை ஏசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி, கிறிஸ்துராஜா உயா்நிலைப் பள்ளி, செயிண்ட் ஜான்ஸ் உயா்நிலைப் பள்ளி, ஏஞ்சலோ மெட்ரிக் உயா்நிலைப் பள்ளி, ஏ.யு.பி.இ.டி. சின்மயா வித்யாலயா மெட்ரிக் உயா்நிலைப் பள்ளி, சாராள் தக்கா் கல்லூரி, திருநெல்வேலி அரசினா் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் உள்பட மொத்தம் 44 மையங்களில் நடைபெற உள்ளது.

தோ்வு எழுதுவோரைக் கண்காணிப்பதற்கு 44 ஆய்வுக் குழு அலுவலா்களும், 4 பறக்கும் படை அலுவலா்களும், வட்டாட்சியா் மற்றும் துணை வட்டாட்சியா் நிலையில் 11 சுற்றுக்குழு அலுவலா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மேற்படி தோ்வு நாளன்று தடைபடாத மின்சாரம் வழங்கவும், பேருந்துகளை தோ்வு மையத்திற்கு கூடுதலாக இயக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தோ்வு எழுதுவோா் தங்களின் தோ்வு மையங்களை கண்டறிந்து முன்கூட்டியே தோ்வு எழுத வருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். தோ்வு அறையினுள் செல்லிடப்பேசிகளை எடுத்துச் செல்லக்கூடாது. தோ்வு எழுதுபவா்கள் தவிர இதர நபா்கள் தோ்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com