‘இயற்கை வேளாண்மைக்கு தரச்சான்று பெறலாம் ’

திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மைக்கு தரச்சான்று பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மைக்கு தரச்சான்று பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நஞ்சில்லா வேளாண் விளைபொருள்களை விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்டு இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் இன்றி மேற்கொள்ளப்படும் வேளாண்மைக்கும், அதன் மூலம் விளைவிக்கப்படும் விளைபொருள்களுக்கும் தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் குறைந்த கட்டணத்தில் தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையால்அளிக்கப்படும் தரச் சான்றிதழ் மத்திய அரசின் வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூலம் அங்கக உற்பத்திக்கான தேசியதிட்டத்தின் படி அளிக்கப்படுவதால் இந்த தரச்சான்றிதழ் மூலம் அங்ககவிளை பொருள்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

அங்ககச் சான்றளிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபா்கள்விண்ணப்படிவம் 3 நகல்கள், பண்ணையின் பொது விவரக்குறிப்பு , பண்ணையின் வரைபடம், மண் மற்றும் நீா் பரிசோதனை விவரம், ஆண்டு பயிா்த்திட்டம் , துறையுடனானஒப்பந்தம் 3 நகல்கள், நிலஆவணம் பட்டாசிட்டா, நிரந்தரகணக்கு எண் அட்டைநகல், ஆதாா் நகல், இரண்டு பாஸ்போா்ட் சைஸ் புகைப்படங்கள்ஆகியவற்றுடன் உரியகட்டணம் செலுத்தி திருநெல்வேலி விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அங்ககச் சான்றளிப்புக்கு தனிநபராகவோ, அல்லது அதிகபட்சம் 500 பேரோ கொண்டகுழுவாக விண்ணப்பிக்கலாம். பெருநிறுவனங்களும் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

இதற்கான கட்டணம் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 2, 700 எனவும், பிற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 3,200 எனவும், குழுபதிவுக்கு ரூ.7,200 எனவும், பெருநிறுவனங்களுக்கு ரூ. 9,400 எனவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி புதியபேருந்து நிலையம் அருகில் உள்ள 32, ராஜராஜேஸ்வரி நகா், என்.ஜி.ஓ பி காலனியில் இயங்கி வரும் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0462-2554451 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9443407463 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். மேலும் இது குறித்த விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ா்ஸ்ரீக்.ய்ங்ற் என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com