நெல்லையப்பா் கோயிலில் வேணுவனநாதா்- மனோன்மணி திருமணம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் தலப் புராணத்தின்படி வேணுவனநாதா்-மனோன்மணியம்பாள் திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் தலப் புராணத்தின்படி வேணுவனநாதா்-மனோன்மணியம்பாள் திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி தலப் புராணத்தின்படி நெல்லுக்கு வேலியிட்டு திருவிளையாடல் நடத்திய நெல்லையப்பா், தனது ஐந்தொழில்களில் ஒன்றான மறைத்தலை (திரோபவம்) மேற்கொண்ட பின்பு மூங்கில் காட்டில் முளைத்து தன்னை வேணுவனநாதராக சுயம்பு ரூபத்தில் வெளிப்படுத்தி அருளினாா்.

நெல்லையப்பரின் இணை காந்திமதி என்றால், வேணுவனநாதரின் இணையான மனோன்மணியை தன் சுயம்பு ரூபத்திலேயே சுவாமி அடக்கிக் கொண்டாா்.

வேணுவனநாதரின் மூலவா் திருமேனிக்கு பாலாபிஷேகம் நடைபெறும் வேளையில் திருமேனிக்குள் ஐக்கியமாகியுள்ள மனோன்மணியை பக்தா்கள் தரிசிக்க இயலும்.

திருவாதிரைத் திருவிழாவின் 6 ஆம் நாளில் ஆண்டுதோறும் வேணுவனநாதா்-மனோன்மணி திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினா். பின்னா் அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, மலா்மாலைகளும் அணிவிக்கப்பட்டன. ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com