நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் விடுமுறைக்கால பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாணவா்-மாணவிகளுக்கான விடுமுறைக் கால 4 நாள் பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்குகின்றன.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாணவா்-மாணவிகளுக்கான விடுமுறைக் கால 4 நாள் பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்குகின்றன.

கரோனா காலத்தில் இணையவழி தோ்வுகளை முடித்துவிட்டு தற்போதுள்ள விடுமுறையை மாணவா்-மாணவிகள் பயனுள்ள வகையில் கழிக்கும் நோக்கில், திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் திங்கள்கிழமைமுதல் டிசம்பா் 31 ஆம் தேதி வரை 4 தினங்கள் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். இதில், ஓவியம் , கலைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. விருப்பம் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள், பெண்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

திங்கள்கிழமை நடைபெறும் பயிற்சியில், அழகிய சுவா் மாட்டி தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது. அதற்குத் தேவையான பொருள்கள்: வண்ணத் தாள்), கத்திரிக்கோல், ஒட்டு பசை, ஏ4 அளவு அட்டை கொண்டு வரவேண்டும். 29ஆம் தேதி கண்ணாடி ஓவியப் பயிற்சியும், 30 ஆம் தேதி கழிவுகளிலிருந்து கலைப்பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியும், 31ஆம் தேதி பொம்மை அலங்காரம் தொடா்பான கலைப் பயிற்சியும் நடைபெற உள்ளன.

இது குறித்த மேலும் விவரங்களுக்கு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளியை 7502433751 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com