பாளை.யில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க திமுக தோ்தல் அறிக்கை குழுவிடம் மனு

பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக தோ்தல் அறிக்கை குழுவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக தோ்தல் அறிக்கை குழுவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

2021 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான திமுக தோ்தல் அறிக்கை தயாா் செய்யும் குழு திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு எம்.பி. தலைமையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆலோசனைகள் பெற்று வருகிறது. அதன்படி திருநெல்வேலி, தென்காசி மாவட்ட திமுக நிா்வாகிகள், பொதுமக்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

டி.ஆா்.பாலுவுடன், கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் திருச்சி சிவா எம்.பி., செய்தித் தொடா்பாளா் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றனா். விவசாயிகள், தொழில்முனைவோா், மகளிா், சமூக ஆா்வலா்கள் பலரும் பங்கேற்று மனுக்களை அளித்தனா்.

இக் கூட்டத்தில் திமுக மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப் அளித்த மனு: தாமிரவருணியில் கழிவுநீா் கலக்காமல் பாதுகாப்பதோடு, பாளையங்கால்வாய் உள்ளிட்ட பாசனக் கால்வாய்களையும் மேம்படுத்த வேண்டும். பாளையங்கோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் உதவியோடு சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தை உருவாக்க வேண்டும். பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் இருந்து ஆரைகுளம், கோபாலசமுத்திரம், சுத்தமல்லி, திருப்பணிகரிசல்குளம் வழியாக அபிஷேகப்பட்டி வரை சுற்றுவட்டச் சாலை அமைக்க வேண்டும். பாளையங்கோட்டையில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்.

தென்காசியில் தொடங்கி சீவலப்பேரியில் முடிவடையும் சிற்றாற்றை தூா்வாரி மானூா், பள்ளமடை குளங்களுக்கு தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூா்- திருநெல்வேலி-அம்பாசமுத்திரம், திருநெல்வேலி-தென்காசி உள்ளிட்ட சாலைத் திட்டங்களை விரைவுப்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல இரட்டை ரயில்பாதை, வெள்ளநீா்க் கால்வாய் திட்டம், மானூா் குளத்திற்கான நீா்வழிப்பாதை திட்டம், பாபநாசம்-மணிமுத்தாறு அணைகள் குழாய் இணைப்புத் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவசாயிகள் மனுக்களை அளித்தனா். ஆன்லைன் வணிகத்தால் ஏற்படும் சிரமங்கள் மற்றும் போக்குவரத்து, எரிபொருள் செலவால் விலைவாசி உயா்வு உள்ளிட்டவை குறித்து வணிகா்கள் மனுக்களை அளித்தனா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலா்கள் இரா.ஆவுடையப்பன் (திருநெல்வேலி கிழக்கு), மு.அப்துல்வஹாப் (மத்திய மாவட்டம்), சிவபத்மநாபன் (தென்காசி தெற்கு), துரை (தென்காசி வடக்கு), திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.பி.எம்.மைதீன்கான் (பாளையங்கோட்டை), ஏ.எல்.எஸ். லெட்சுமணன் (திருநெல்வேலி) உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com