நெல்லையிலிருந்து கடையம் வழியாக பெங்களூருக்கு ரயில் இயக்கக் கோரி மனு

திருநெல்வேலியில் இருந்து கடையம் வழியாக பெங்களூருக்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் இருந்து கடையம் வழியாக பெங்களூருக்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம், மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு: திருநெல்வேலியில் பிலாஸ்பூா் ரயில் பெட்டிகள் வாரத்தில் 3 நாள்கள் எவ்வித பயனுமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவைகளைப் பயன்படுத்தி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, மதுரை, சேலம் வழியாக பெங்களூருக்கு வாரந்திர ரயில் இயக்கிட வேண்டும்.

இதேபோல பயனற்ற வகையில் திருநெல்வேலியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தாதா் ரயிலின் காலியான பெட்டிகள் மூலம் ஞாயிற்றுக்கிழமைதோறும் திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம், தென்காசி, மதுரை, திருச்சி, விழுப்புரம் மாா்க்கத்தில் சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும்.

இந்த ரயில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டால் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பயன்படுவாா்கள். மேலும், ரயில்வே துறைக்கு நல்ல வருவாயும் கிடைக்கும். ஆகவே, உடனே ரயில்களை இயக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com