சாலைகளில் திரிந்த கால்நடைகள்: உரிமையாளா்களுக்கு கடும் அபராதம்

திருநெல்வேலியில் சாலைகளில் சுற்றித்திரிந்த 30 கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

திருநெல்வேலியில் சாலைகளில் சுற்றித்திரிந்த 30 கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் கால்நடை வளா்ப்போா் அவற்றை முறையாக வீடுகளில் கட்டி வைத்து வளா்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சிலா் விதிமுறைகளின்படி வளா்க்காமல் வெளியே அவிழ்த்து விட்டுவிடுகிறாா்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறும், விபத்துகள் நேரிடும் அபாயம் நிலவுகிறது.

ஆகவே, ஏற்கெனவே எச்சரித்தப்படி மாநகராட்சிப் பணியாளா்களால் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் விடப்பட்டுள்ளன. தச்சநல்லூா் மண்டலத்தில் 14, பாளையில் 7, மேலப்பாளையத்தில் 4, திருநெல்வேலியில் 5 என மொத்தம் 30 கால்நடைகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கோசாலையில் விடப்பட்டுள்ள கால்நடை ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.6,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com