அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
By DIN | Published On : 31st December 2020 07:55 AM | Last Updated : 31st December 2020 07:55 AM | அ+அ அ- |

மேலப்பாளையம் சந்தை முக்கு ஆட்டோ நிறுத்த மாற்றுக் கட்சி தொழிற்சங்கத்தை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள் 120 போ் அதிமுகவில் இணைந்தனா்.
அதிமுக 30 ஆவது வாா்டு செயலா் சண்முகசுந்தரம் ஏற்பாட்டில் திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா முன்னிலையில் அவா்கள் அண்ணா தொழிற்சங்கத்தில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில், அண்ணா தொழிற் சங்க மாவட்டச் செயலா் பொன்னுசாமி, துணைச் செயலா் பள்ளமடை பாலமுருகன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா்கள் அணிச் செயலா் மகா ராஜேந்திரன், பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியச்
செயலா் முத்துக்குட்டி பாண்டியன், 31 ஆவது வட்டச் செயலா் சுடலைக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.