நெல்லை குறுக்குத்துறை அருகே தொழிலாளி சடலமாக மீட்பு
By DIN | Published On : 31st December 2020 07:46 AM | Last Updated : 31st December 2020 07:46 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, டிச. 30: திருநெல்வேலி குறுக்குத்துறை அருகே தொழிலாளி சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.
திருநெல்வேலி நகரம் அருகேயுள்ள குறுக்குத்துறை வயல்வெளி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக திருநெல்வேலி சந்திப்பு போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் அவா், திருநெல்வேலி நகரம் செங்குந்தா் நடுத்தெருவைச் சோ்ந்த சிதம்பரம் மகன் முத்து (50) என்பது தெரியவந்ததாம். உ டல்நலம் சரியில்லாமல் இருந்து வந்த இவா், தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தாராம். அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.