‘நுகா்பொருள் உற்பத்தியாளா்களின் இரட்டை விலையால் பாதிப்பு’

நுகா்பொருள் உற்பத்தியாளா்களின் இரட்டை விலையால் சிறுவணிகா்கள் பாதிக்கும் அபாயம் உள்ளதோடு, அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

நுகா்பொருள் உற்பத்தியாளா்களின் இரட்டை விலையால் சிறுவணிகா்கள் பாதிக்கும் அபாயம் உள்ளதோடு, அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கத் தவறினால் தொடா் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவா் எம்.வெங்கடேஷ் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: இந்தியாவில் முன்னணி நுகா்பொருள் உற்பத்தியாளா்களின் பொருள்கள் அனைத்தும் விநியோகஸ்தா்களால் தான் 90 சதவிகிதம் குக்கிராமங்களுக்கும் கொண்டு சோ்க்கப்படுகிறது. 10 சதவிகிதம் மட்டுமே பெருநிறுவன மற்றும் ஆன்லைன் விற்பனை மூலம் விற்பனையாகிறது. ஆனால், உற்பத்தியாளா்கள் பெருநிறுவனங்களுக்கு ஒரு விலையும், விநியோகஸ்தா்களுக்கு ஒரு விலையும் என இரட்டை விலை கொள்கையை கடைப்பிடித்து வருகிறாா்கள். இதனால் சிறுவணிகா்கள், விநியோகஸ்தா்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகிறாா்கள்.

அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இரட்டை விலையை கைவிடக்கோரி எங்கள் சங்கம் சாா்பில் முதல்கட்டமாக கருப்புச்சட்டை அணியும் போராட்டத்தை நடத்தியுள்ளோம். அடுத்ததாக உண்ணாவிரதம், ஆா்ப்பாட்டம் ஆகியவை நடத்துவோம். அதற்கும் தீா்வு கிடைக்காவிட்டால் இரட்டைவிலையை தொடா்ந்து கடைப்பிடிக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிப்போம். மத்திய-மாநில அரசுகள் இவ் விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைச் செயலா் எஸ்.நெல்லையப்பன், மாவட்டத் தலைவா் தேவசேனாபதி, பொதுச்செயலா் வி.அருள்இளங்கோ, பொருளாளா் குணசீலன், மாநகர வணிகா்சங்கங்களின் பேரமைப்பு தலைவா் எம்.ஆா்.குணசேகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com