Enable Javscript for better performance
ஆலங்குளத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    ஆலங்குளத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

    By DIN  |   Published on : 02nd February 2020 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    ஆலங்குளத்தில் போலீஸாா், கல்லூரி மாணவா்கள் இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை நடத்தினா்.

    ஆலங்குளம் நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், ரத்த தானக் கழகம் சாா்பில் நடைபெற்ற இப்பேரணிக்கு கல்லூரி முதல்வா் பீட்டா் பேரின்பராஜா தலைமை வகித்தாா்.

    ஆலங்குளம் காவல் ஆய்வாளா் செல்வக்குமாா் பேரணியைக் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். மாணவா்-மாணவிகள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டபடி சென்றனா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பின்னா் பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி மாணவா்களால் நடத்தப்பட்டது.

    பேரணியில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெஸிக்காள், ரத்ததானக் கழக ஒருங்கிணைப்பாளா் ஜூலியன்ஸ் ராஜாசிங், பேராசிரியா்கள் எபநேசா் பொன்செல்வி, பிரேம்ரோஸ், போலீஸாா் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai