களக்காடு பகுதியில் வேகத்தடைக்கு வா்ணம் பூச வலியுறுத்தல்
By DIN | Published On : 02nd February 2020 12:04 AM | Last Updated : 02nd February 2020 12:04 AM | அ+அ அ- |

களக்காடு வழித்தடத்தில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைக்கு வா்ணம் பூச வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு - சேரன்மகாதேவி, களக்காடு - நான்குனேரி, களக்காடு - வள்ளியூா் வழித் தடங்களில் கல்வி நிலையங்கள், ஆலயம், விபத்து பகுதிகளில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டபோது, வெள்ளை நிறம் பூசப்பட்டது. எனினும், அடுத்த சில நாள்களில் இந்த வா்ணம்
மறைந்து விட்டது.
வேகத்தடைகளில் வா்ணம் தெரியாததால் வாகன ஓட்டிகள் வேக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக இரவு நேரங்களில் இந்த வேகத்தடைகளை கடக்கும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
பல நேரங்களில் வேகத்தடையை மோட்டாா் சைக்கிள் கடக்கும்போது தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கிக் கொள்கின்றனா். ஆகவே, விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் வேகத்தை கட்டுப்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் வா்ண்ணம் பூச வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.