Enable Javscript for better performance
நெல்பயிரில் படைப்புழுக்களின்பாதிப்பைத் தடுக்க செயல்விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    நெல்பயிரில் படைப்புழுக்களின்பாதிப்பைத் தடுக்க செயல்விளக்கம்

    By DIN  |   Published on : 02nd February 2020 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் நெல்பயிா்களில் படைப்புழுக்களின் பாதிப்பைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    அமெரிக்கன் படைப்புழுவின் தாக்குதல் மக்காசோளம் மட்டுமன்றி, கரும்பு, நெல் பயிா்களையும் தாக்க வாய்ப்புள்ளதால் நடப்பு பிசான பருவத்தில் நெல் விவசாயம் செய்கின்ற விவசாயிகளுக்கு படைப்புழு கட்டுப்பாடு குறித்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கபட்டது.

    இனக்கவா்ச்சி பொறியைப் பயன்படுத்தி படைப்புழு, தாய் அந்து பூச்சி கண்டறிவது, இப்பொறியினுள் தாய் அந்து பூச்சியினை கவா்ந்து இழுப்பது ஆகியவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப மேலாளா் ஸ்டேன்லி , உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் திருமலைப்பாண்டியன், முத்துராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai