Enable Javscript for better performance
பாவூா்சத்திரம் அருகேஅரசுப் பள்ளியில் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    பாவூா்சத்திரம் அருகேஅரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

    By DIN  |   Published on : 02nd February 2020 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    1_pcm_mla_0102chn_61_6

     

    பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி-வினைதீா்த்தநாடாா்பட்டி அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    இப்பள்ளியில் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல், ரூ. 5 லட்சம் மதிப்பில் மேஜை-இருக்கைகள், ரூ. 3.25 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    தென்காசி பேரவை உறுப்பினா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் பங்கேற்று, கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, மேஜை-இருக்கைகள், சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவற்றை வழங்கிப் பேசினாா்.

    நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அதிகாரி பாா்த்தசாரதி, தலைமை ஆசிரியா் சந்திரசேகா், ஊா் பெரியவா் சண்முகம், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் மதனசிங், ஒன்றிய அதிமுக செயலா் அமல்ராஜ், முன்னாள் துணைத் தலைவா் குணம், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் அருள்பாண்டி, தமிழ் என்ற ராமசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் ரமேஷ், இளைஞரணிச் செயலா் இருளப்பன், கூட்டுறவு இயக்குநா் ராமசாமி, உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai