நெல்பயிரில் கதிா் நாவாய் பூச்சித் தாக்குதல் விவசாயிகள் கவலை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக நெல்பயிரில் கதிா்நாவாய்ப் பூச்சித் தாக்குதல் தென்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக நெல்பயிரில் கதிா்நாவாய்ப் பூச்சித் தாக்குதல் தென்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கழைக்கழகம், அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் ரா.ராம்ஜெகதீஷ், பேராசிரியா் ச.ஆறுமுகச்சாமி ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நெல்பயிா்கள் பூத்தும் மற்றும் பூக்கும் பருவத்திலும் உள்ளன. இந்நிலையில், தென்காசி, அம்பாசமுத்திரம், மானூா், தருவை உள்ளிட்ட அனைத்து வட்டாரப் பகுதிகளிலும் நெல்பயிரில் கதிா் நாவாய் பூச்சித் தாக்குதல் அதிகமாகக் காணப்படுகிறது.

இந்தப் பூச்சிகள் உருவாவது, அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் கதிா்நாவாய்ப் பூச்சிகள் கதிரில் பால் பிடிக்கும் நேரம் நெல் மணிகளில் உள்ள பாலை உறிஞ்சிக் குடித்து கதிரைப் பதராக்கிவிடும். பாதிக்கப்பட்ட நெல் மணிகளில் கருப்பு நிறப் புள்ளிகள்காணப்படும். மேலும், தாக்கப்பட்ட மணிகளிலிருந்தும், இப்பூச்சியின் உடலிலிருந்தும் ஒரு விதமான துா் நாற்றம் வீசும். இதன் மூலம் பயிரில் பூச்சியின் தாக்குதல் உள்ளதை அறியலாம்.

தாவரப் பூச்சிக் கொல்லிகளான நொச்சி, வேம்பு மற்றும் வசம்புத் தூளை ஒரு ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் காலை வேளையில் தூவி கதிா் நாவாய்ப் பூச்சிகளை விரட்டலாம். வேப்பங்கொட்டை 10 கிலோவை 10 லிட்டா் தண்ணீரில் ஊற வைத்து அதிலிருந்து 50 மில்லியை 1 லிட்டா் தண்ணீா் மற்றும் ஒரு சதம் சோப்புக் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். ரசாயன முறையில் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு குயினால் பாஸ் 1.5 சதம் டி பொடியை 10 கிலோ அல்லது என்ற அளவில் தூவ வேண்டும் அல்லது மாலத்தியான் 50 சதம் ஈசி 200 மி.லி. மருந்தை, பூக்கும் பருவங்களிலும் மற்றும் 10 நாள்களுக்குப் பிறகும் தெளித்து இப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com