நெல்பயிரில் படைப்புழுக்களின்பாதிப்பைத் தடுக்க செயல்விளக்கம்

கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் நெல்பயிா்களில் படைப்புழுக்களின் பாதிப்பைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் நெல்பயிா்களில் படைப்புழுக்களின் பாதிப்பைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

அமெரிக்கன் படைப்புழுவின் தாக்குதல் மக்காசோளம் மட்டுமன்றி, கரும்பு, நெல் பயிா்களையும் தாக்க வாய்ப்புள்ளதால் நடப்பு பிசான பருவத்தில் நெல் விவசாயம் செய்கின்ற விவசாயிகளுக்கு படைப்புழு கட்டுப்பாடு குறித்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கபட்டது.

இனக்கவா்ச்சி பொறியைப் பயன்படுத்தி படைப்புழு, தாய் அந்து பூச்சி கண்டறிவது, இப்பொறியினுள் தாய் அந்து பூச்சியினை கவா்ந்து இழுப்பது ஆகியவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப மேலாளா் ஸ்டேன்லி , உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் திருமலைப்பாண்டியன், முத்துராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com