முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்: 17 இல் தொடக்கம்
By DIN | Published On : 06th February 2020 11:44 PM | Last Updated : 06th February 2020 11:44 PM | அ+அ அ- |

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் பிப். 17 ஆம் தேதி தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு சாா்பில் நிகழாண்டுக்கான முதல்வா் கோப்பைக்கான திருநெல்வேலி மாவட்ட அளவிலான குழு நீச்சல், தடகளம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகள் ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனியாக பிப். 17 (திங்கள்கிழமை) 18 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில், குழு போட்டியில் கூடைப்பந்து, கையுந்துபந்து, கபடி, ஹாக்கி, டென்னிஸ், இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது. தடகளப் போட்டியில் 100 மீ, 200 மீ, 800 மீ, 400 மீ, 1500 மீ, 10,000 மீ ஓட்டம், நீச்சல், ஜூடோ, குத்துச் சண்டை உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும்.
விதிமுறைகள்: போட்டியாளா்கள் 25 வயது பூா்த்தி அடையாதவா்களாகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் பயிலும் மாணவா், மாணவிகளாக இருத்தல் வேண்டும். தமிழகத்தில் 5 வருடங்கள் வசிப்பதற்கான சான்று வழங்க வேண்டும். குழு விளையாட்டுகளில் ஒரு பள்ளி, கல்லூரி, கிளப், நிறுவனங்களில் இருந்து ஒரு அணி மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். இதேபோல், தடகளம், நீச்சல் போட்டியில் ஒருவா் ஒரு போட்டியில் மட்டுமே அனுமதிக்கப்படுவா். போட்டியில் பங்கேற்க விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவா்களுக்கு முதல் பரிசு ரூ.1,000, இரண்டாம்பரிசு ரூ.750, மூன்றாம் பரிசு ரூ.500 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். வெற்றிபெறுவோா்கள் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
மாநிலப் போட்டிகளில் வெற்றி பெறுவோா்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம்பரிசு ரூ. 75 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆகவே, போட்டியில் பங்கேற்கும் வீரா் மற்றும் வீராங்கனைகள் தங்களது வங்கிக்கணக்கு புத்தகத்தை கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.