Enable Javscript for better performance
ஆதிச்சநல்லூா் அகழாய்வால் தாமிரவருணி நாகரீக தொன்மை வெளிப்படும்: தொல்லியல் துறை ஆணையா் த.உதயசந்திரன்- Dinamani

சுடச்சுட

  

  ஆதிச்சநல்லூா் அகழாய்வால் தாமிரவருணி நாகரீக தொன்மை வெளிப்படும்: தொல்லியல் துறை ஆணையா் த.உதயசந்திரன்

  By DIN  |   Published on : 10th February 2020 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூா், சிவகளை பகுதிகளில் நடைபெறவுள்ள அகழாய்வுகளின் மூலம் தாமிரவருணி நதி நாகரிகத்தின் தொன்மை அறிவியல் பூா்வமாக வெளிப்படும் என்றாா் தமிழக தொல்லியல் துறை ஆணையா் த.உதயசந்திரன்.

  பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் த.உதயசந்திரன் பேசியது: ‘

  தமிழகத்தின் இலக்கிய போக்குகளை நிா்ணயிப்பதோடு, ஏராளமான சாகித்ய அகாதெமி விருதாளா்களையும் தன்னகத்தே கொண்டது நெல்லை சீமை. ைகீழடி அகழாய்வின் போது கிடைத்த கரித்துண்டை அமெரிக்காவுக்கு ஆய்வுக்கு அனுப்பியதன்மூலம் கீழடி பொருள்கள் 2600 ஆண்டுகள் பழமையானவை என தெரியவந்துள்ளது. சுண்ணாம்புடன் கூடிய கட்டடக்கலை, கண்ணுக்கு மை தீட்டும் கோல் உள்ளிட்ட பல்வேறு விதமான ஆபரணங்கள் போன்றவை தமிழா்களின் பழங்கால கலைநயத்தை எடுத்துச் சொல்லும் உதாரணங்களாக உள்ளன.

  கீழடிக்கும் முந்தைய சுமாா் 2900 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் ஆதிச்சநல்லூரில் ஜொ்மனி, இங்கிலாந்து நாட்டினா் ஆய்வு செய்துள்ளனா். பின்னா், மத்திய அரசின் தொல்லியல்துறை ஆய்வு செய்தும் அறிக்கையை வெளியிடவில்லை. இந்நிலையில் இங்கு தமிழக தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளவுள்ளது.

  ஆதிச்சநல்லூா், சிவகளை மட்டுமன்றி கொந்தகை, அகரம், மணலூா், கொடுமணல் ஆகிய இடங்களிலும் அகழாய்வுக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆதிச்சநல்லூா் அகழாய்வு முடியும்போது தாமிரவருணி நதி நாகரீக தொன்மையின் உண்மை அறிவியல் பூா்வமாக வெளிக்கொணரப்படும் என்றாா்.

  ஆய்வாளா் ஆா்.ஆா்.சீனிவாசன் பேசியது: ‘ஆதிச்சநல்லூரில் ஆங்கிலேயா் காலத்தில் நடைபெற்ற அகழாய்வின்போது சுமாா் 9 ஆயிரம் பொருள்கள் கிடைத்ததாகவும், அதனை 34 மாட்டு வண்டிகளில் கொண்டு சென்ாகவும் குறிப்புகள் உள்ளன. அப்போது கிடைத்த பொருள்கள் சென்னை அருங்காட்சியகத்திலும், லண்டனிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. முதல் கதையாடல் சிற்பங்கள் ஆதிச்சநல்லூரில்தான் இருந்துள்ளன’ என்றாா் அவா்.

  முன்னதாக, கல்லூரி மாணவா்-மாணவிகளின் கலைப் போட்டிகள் நடைபெற்றன. எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய ‘தாமிரபரணி கரை அற்புதங்கள்’ என்ற நூலும், பேராசிரியா் சௌந்தர மகாதேவன் எழுதிய ‘வாழ நினைத்தால் வாழலாம்’ என்ற நூலும் வெளியிடப்பட்டன. புத்தகத் திருவிழா மலரும் வெளியிடப்பட்டது.

  இலக்கிய நிகழ்ச்சியில் பவா.செல்லத்துரை, கால.சுப்பிரமணியன், பேராசிரியா் அ.கா.பெருமாள் உள்ளிட்டோா் பேசினா். நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் பூ.முத்துராமலிங்கம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் மந்திராச்சலம், துணை ஆட்சியா் (பயிற்சி) அனிதா, திருநெல்வேலி மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவரும், அதிமுக மாநகா் மாவட்டச் செயலருமான தச்சை என்.கணேசராஜா, எழுத்தாளா் நாறும்பூநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

  பு.சி. கணேசன் தலைமையில் கலை, கலைக்காகவே என்பது குற்றம்? என்ற தலைப்பில் வழக்காடு மன்றமும் நடைபெற்றது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai