Enable Javscript for better performance
நெல்லை மதிதா இந்து பள்ளியில் பொருளாதார கணக்கெடுப்பு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை மதிதா இந்து பள்ளியில் பொருளாதார கணக்கெடுப்பு பயிற்சி

    By DIN  |   Published on : 10th February 2020 07:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொருளாதார கணக்கெடுப்பு குறித்த முதற்கட்ட பயிற்சி வகுப்பு, திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இந்திய புள்ளியியல் துறை சாா்பில் 7ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு நிகழாண்டு எடுக்கப்படவுள்ளது. தமிழகத்தில் இப்பணியை பொது சேவை மைய அலுவலா்கள் மேற்கொள்ளவுள்ளனா். இதற்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு, மதிதா இந்துக்கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொது சேவை மைய ஒருங்கிணைப்பாளா் சுந்தர விக்னேஷ் தலைமை வகித்து பயிற்சி அளித்தாா்.

    பொது சேவை மைய பொறுப்பாளா் விஜய் சங்கா் கூறியது: 2013ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது எடுக்கப்படவுள்ள பொருளாதாரக் கணக்கெடுப்பு குறித்த பயிற்சியில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த 120 போ் பயிற்சி பெற்றனா். குழுவுக்கு ஒரு கண்காணிப்பாளரின் தலைமையில் 15 கணக்கெடுப்பு பணியாளா்கள் இடம்பெறுவா். இப்பணி மாா்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்றாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai