Enable Javscript for better performance
மேலப்பாளையம் பள்ளி விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    மேலப்பாளையம் பள்ளி விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம்

    By DIN  |   Published on : 10th February 2020 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட போட்டிகளில் மேலப்பாளையம் பள்ளி சிறப்பிடம் பெற்றது.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவா்-மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் மேலப்பாளையம் காயிதே மில்லத் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் கேரம் போட்டியின் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தனா். கோ-கோ ஆண்கள் போட்டியில் இரண்டாம் பரிசும், தொடா் ஓட்டத்தில் மூன்றாம் பரிசும் பெற்றனா். போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சுபா, ருக்ஷானா, ஐனுல் பசரியா, அனெஸ், முகமது புரோஸ்கான், முகமது தௌபீக் ஆகியோரை தலைமையாசிரியா் சோமசுந்தரம், உடற்கல்வி ஆசிரியா் குமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai