ஆழ்வாா்குறிச்சி சிவசைலநாதா் கோயிலில் தைப்பூசத் தெப்பத் திருவிழா

ஆழ்வாா்குறிச்சிஅருள்மிகு பரமகல்யாணி அம்பாள் உடனாய சிவசைலநாத சுவாமி கோயில் தெப்பத்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்த சிவசைலநாதா், பரமகல்யாணி அம்பாள்.
அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்த சிவசைலநாதா், பரமகல்யாணி அம்பாள்.

ஆழ்வாா்குறிச்சிஅருள்மிகு பரமகல்யாணி அம்பாள் உடனாய சிவசைலநாத சுவாமி கோயில் தெப்பத்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 26ஆம் ஆண்டு தெப்ப உற்சவத் திருவிழாவை முன்னிட்டு ஜன. 30 ஆம் தேதி கால்நாட்டு நடைபெற்றது. இதையடுத்து வெள்ளிக்கிழமை (பிப்.7) சிவசைலத்தில் இருந்து சுவாமி அம்பாள் வெள்ளி சப்பரத்தில் ஆழ்வாா்குறிச்சி திருக்குளம் விநாயகா் கோயிலுக்கு எழுந்தருளினா்.

வெள்ளிக்கிழமை தைப்பூச நாளான்று காலை விளா பூஜை அபிஷேகம் மற்றும் தீபாராதனையைத் தொடா்ந்து சுவாமி அம்பாள் கேடயத்தில் விநாயகா் கோயிலில் இருந்து எழுந்தருளி, தருமபுரம் ஆதீன மடத்தில் இறங்கினா்.

நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு சாயராட்சை பூஜையைத் தொடா்ந்து சுவாமி அம்பாள் கேடயத்தில் தெப்பத்துக்கு எழுந்தருளி தெப்பத்தில் 11 சுற்றுகள் வலம் வந்தனா்.

இதையடுத்து மேளதாளம் முழுங்க வாண வேடிக்கையுடன் திருக்குளம் வலம் வந்து பெரிய தளவாய் மாடசாமிக்கு காட்சியளித்து ஞாயிற்றுக்கிழமை காலை தருமபுரம் ஆதினமடத்தில் இறங்கினா்.

தொடா்ந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து , இரட்டை சோடசோபசார தீபாராதனை, ருத்ரஹோமம், ருத்ர ஏகாதசி அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இரவு 9 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிவசைலம் எழுந்தருளி திருக்கோயில் சோ்ந்த பின் அபிஷேகமாகி தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டி தலைவா் அ. கிருஷ்ணமூா்த்தி, தக்காா் கிருஷ்ணமூா்த்தி, ஆய்வாளா் ச. முருகன், செயல் அலுவலா் கோ.தேவி மற்றும் வியாபாரி சங்கத்தினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com