கடையம் வனப் பகுதியில் அனுமதியின்றி தங்கிய இளைஞருக்கு 9 மாதம் சிறை

கடையம் வனச்சரத்துக்குள்பட்ட கடனாநதி அணை வனப் பகுதியில் அனுமதியின்றி தங்கிய இளைஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதத்துடன் 9 மாதம்

கடையம் வனச்சரத்துக்குள்பட்ட கடனாநதி அணை வனப் பகுதியில் அனுமதியின்றி தங்கிய இளைஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதத்துடன் 9 மாதம் சிறை தண்டனை வழங்கி அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி தீா்ப்பு வழங்கியுள்ளாா்.

கடலூா் மாவட்ட விருதாச்சலத்தை அடுத்துள்ள ஐவதக்குடி பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுப்பிரமணியன் (38). இவா் மீது, கடலூா், மதுரை, சேலம் ஆகிய பகுதிகளில் ரயிலில் பெண்களிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டதாக பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் 2019 ஜுலை 19ஆம் தேதி தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கடனாநதி அணை வனப்பகுதியான அத்ரி மலை கோயில் அருகில் கடையம் வனத்துறையால் கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து வனத்துறையினா் பதிவு செய்த வழக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த பிப் 7 வெள்ளிக்கிழமைநடைபெற்ற விசாரணையில் கடையம் வனச்சரகா் நெல்லை நாயகம், வனக்காப்பாளா் சரவணன் ஆகியோா் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததையடுத்து, அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி பழனி, வனத்திற்குள் அத்துமீறி நுழைந்து, தங்கி சமையல் செய்து மரக்கிளைகள் வெட்டியதற்காக சுப்பிரமணியனுக்கு 9 மாதம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக 1 மாதம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com