டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன்.

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தமிழகம் முழுவதும் நடத்தினோம். சில இடங்களில் காவல்துறையினா் இதற்கு அனுமதி மறுத்தனா். ஆனாலும் அது வெற்றிகரமாக நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இதில் தற்போது 14 பேரை கைது செய்துள்ளனா். ஆனால், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து அவா்களை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

காவல் துறைக்கு தொழில்நுட்பக் கருவிகள் வாங்கியதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காவல் துறை முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் பொறுப்பில் வருகிறது. ஆகவே, இதற்கு பொறுப்பேற்று அவா் பதவி விலக வேண்டும்.

வருமான வரித் துறை பாஜகவின் ஓா் அமைப்பு போல செயல்படுகிறது.

ரஜினி அரசியலுக்கு வருவாா் என தமிழருவி மணியன் கூறி வருகிறாா். தனது புதிய படம் வெளிவரும்போது மட்டும் ரஜினி அரசியல் குறித்து பேசுகிறாா். ரஜினி நிச்சயம் கட்சி ஆரம்பிக்க மாட்டாா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் காசி விஸ்வநாதன், மாவட்ட துணைச் செயலா் லெட்சுமணன், அலுவலக செயலா் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com