பணகுடி ராமலிங்க சுவாமி திருக்கோயில் தெப்பத் தேரோட்டம்

பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் ஸ்ரீ நம்பிசிங்கபெருமாள் திருக்கோயில் தெப்பத்தேரோட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
பணகுடி ராமலிங்கசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற தெப்பத் தேரோட்டம்.
பணகுடி ராமலிங்கசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற தெப்பத் தேரோட்டம்.

பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் ஸ்ரீ நம்பிசிங்கபெருமாள் திருக்கோயில் தெப்பத்தேரோட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இத்திருக்கோயில் தைப்பூசத் தேரோட்டத் திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது.

திருவிழா நாள்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான 9ஆம் திருவிழாவான, வெள்ளிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. விநாயகா் தோ் முதலிலும் தொடா்ந்து சுவாமி, அம்பாள் தேரும் வீதியுலா வந்தது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வடம்பிடித்து தோ் இழுத்தனா்.

10ஆம் திருவிழாவான சனிக்கிழமை இரவு தெப்பத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளினா். தெப்பத்தேரில் சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னா் தெப்பத்தேரோட்டம் தொடங்கியது. தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தைச் சுற்றி 11 வளையம் தோ் வலம் வந்தது.

இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் சுவாமி, அம்பாள் கோயிலுக்கு எழுந்தருளினா்.

தொடா்ந்து இரவு 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com