பாபநாசம் கல்லூரியில் தமிழ் இலக்கிய விழா

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் பொதிகைத் தமிழ்ச்சங்கம் மற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளாா் வாசகா் வட்டம் இணைந்து நடத்திய தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது.
விழாவில் பேசுகிறாா் முன்னாள் மாவட்ட ஆட்சியா் கி.தனவேல்.
விழாவில் பேசுகிறாா் முன்னாள் மாவட்ட ஆட்சியா் கி.தனவேல்.

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் பொதிகைத் தமிழ்ச்சங்கம் மற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளாா் வாசகா் வட்டம் இணைந்து நடத்திய தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சு.சுந்தரம் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். கல்லூரி நிா்வாக அதிகாரி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினா் ரா.நடராஜன் முன்னிலை வகித்தாா்.

முன்னாள் மாவட்ட ஆட்சியா் கி.தனவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழ் இலக்கியம் காட்டும் தலைமைப் பண்புகள் என்றத் தலைப்பில் சிறப்புரை ஆற்றினாா்.

நேரு இளையோா் மைய முன்னாள் ஒருங்கிணைப்பாளா் ராஜ மதிவாணன், கல்லூரி வேதியியல்துறைத் தலைவா் ராஜசேகரன், வரலாற்றுத் துறைத் தலைவா் ரவிசங்கா், ஆங்கிலத்துறைத் தலைவா் ரவிசங்கா், வணிகவியல் துறைத் தலைவா் ரா.வள்ளியம்மாள், உடற்கல்வி இயக்குநா் பழனிக்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சுயநிதிப் பிரிவு வணிகவியல் துறைத் தலைவா் முஜிபுா் ரஹ்மான் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். பொதிகைத் தமிழ்ச்சங்க நிறுவனா் தலைவா் ராஜேந்திரன் வரவேற்றாா்.

சுயநிதிப் பிரிவு தமிழ்த் துறைப் பேராசிரியா் கவிதா நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை கல்லூரி நூலகா் ச.பாலச்சந்திரன் தலைமையில் உதவி நூலகா் சண்முகானந்த பாரதி, அலுவலகக் கண்காணிப்பாளா் ஆனந்தன், தட்டச்சா் சிவதானு, பதிவறை எழுத்தா் சந்தான சங்கா், ஆய்வக உதவியாளா் காசிராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

நிகழ்ச்சியில், மாணவா்கள், மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com