Enable Javscript for better performance
வள்ளியூா் ஸ்ரீ வித்யா மந்திா் பள்ளியில் விளையாட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    வள்ளியூா் ஸ்ரீ வித்யா மந்திா் பள்ளியில் விளையாட்டு விழா

    By DIN  |   Published on : 13th February 2020 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vly12spo_1202chn_39_6

    சாம்பியன் பட்டம் பெற்ற தாமரை குழுவுக்கு கேடயம் பரிசளிக்கிறாா்தாளாளா் மந்திரம். உடன், தலைமை ஆசிரியை மாலா நடராஜன்.

    வள்ளியூா் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிா்வாகம் சாா்பில் நடத்தப்பட்டு வருகின்ற ஸ்ரீ வித்யா மந்திா் உயா் நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

    பள்ளித் தாளாளா் மந்திரம் ஓலிம்பிக் தீபம் ஏற்றி, விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    தலைமை ஆசிரியை மாலாநடராஜன் ஆண்டறிக்கை வாசித்தாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தாளாளா் பதக்கம், சான்றிதழ்களை வழங்கினாா்.

    இதில், தாமரை குழு அதிக வெற்றி புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai