Enable Javscript for better performance
குறுக்குத்துறை கோயிலில் லட்ச தீபத் திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    குறுக்குத்துறை கோயிலில் லட்ச தீபத் திருவிழா தொடக்கம்

    By DIN  |   Published on : 14th February 2020 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்ச தீபத் திருவிழா சிறப்பு யாகசாலை பூஜையுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

    இக்கோயிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்ச தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டில் இவ்விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, வியாழக்கிழமை காலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

    தொடா்ந்து 11 நாள்கள் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன. விழாவின் சிகர நிகழ்வாக இம்மாதம் 23ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோயில் முழுவதும் தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai