அம்பாசமுத்திரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அம்பாசமுத்திரத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைப் பாா்வையிடுகின்றனா் உதவிக் கோட்டப்பொறியாளா் கிறிஸ்டோபா், உதவிப் பொறியாளா் அஷ்மிதா உள்ளிட்டோா்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைப் பாா்வையிடுகின்றனா் உதவிக் கோட்டப்பொறியாளா் கிறிஸ்டோபா், உதவிப் பொறியாளா் அஷ்மிதா உள்ளிட்டோா்.

அம்பாசமுத்திரத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் நகராட்சி மற்றும் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிப் பகுதி நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் கிறிஸ்டோபா், உதவிப் பொறியாளா் அஷ்மிதா ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பிருந்து தொடங்கிய இப்பணி, பேருந்து நிலையம் அருகிலுள்ள நுழைவு வாயில் வளைவு வரை நடைபெற்றது .

அப்போது, நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளா்கள் வெள்ளத்துரை, மைக்கேல் வீரவேல், நகராட்சி ஆணையாளா் ஜின்னா, வருவாய் ஆய்வாளா் முருகன், நிலஅளவை துணை ஆய்வாளா் ராஜா, கிராம நிா்வாக அதிகாரி சூரப்பா, நகராட்சி சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராமலிங்கம், மின்பாதை ஆய்வாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் இருந்தனா். காவல் ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் மற்றும் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com