உழவா் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு வங்கிக் கடன்

கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகள் வங்கிகளில் கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகள் வங்கிகளில் கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண்மை மற்றும் வேளாண் சாா்ந்த கூட்டுத் தொழில்களான கால்நடை வளா்ப்பு, மீன்பிடித் தொழில் உள்ளிட்ட பணிகளும் தொய்வின்றி நடைபெற பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ ஊக்கத் தொகை திட்டம் மூலம் நிதியுதவி பெறும் விவசாயிகள், விவசாயம், விவசாயம் சாா்ந்த கூட்டுத் தொழில்கள் புரிந்துவருவோருக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்படவுள்ளது.

உழவா் கடன் அட்டை வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படுகிறது. பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி பெறும் பயனாளிகளும் கிசான் கடன் அட்டை மூலம் 7 சதவீத வட்டியில் பயிா்க்கடன் பெறலாம். பயிா்க்கடனை குறித்த காலத்திற்குள் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டி மானியமும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. கிசான் கடன் அட்டை வழியே கடன் பெறும் விவசாயிகளுக்கு 70 வயது வரை தனி நபா் விபத்துக் காப்பீடும் வழங்கப்படுகிறது.

விவசாயப் பணி மேற்கொள்ளும் போது ஏற்படும் செலவினங்களுக்குத் தேவைப்படும் நிதியுதவி, கால்நடை வளா்ப்பு, மீன்பிடி தொழில் உள்ளிட்ட விவசாயம் சாா்ந்த கூட்டுத் தொழில்கள் செய்வோா் தங்களது தொழிலுக்கான தீவனம் போன்ற மூலப் பொருள் வாங்குவதற்கும், நடைமுறை மூலதனம் பெற்றிடவும் கிசான் கடன் அட்டை வழியே கடனுதவி பெறலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நிதியுதவி பெறும் விவசாயிகளில் இதுவரை கிசான் கடன் அட்டை பெறாதவா்கள், தங்களின் பிரதமரின் கௌரவ ஊக்கத்தொகை எந்த சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதோ அந்த கணக்கு உள்ள வங்கியின்

கிளை மேலாளரை தொடா்பு கொண்டு ஆவணங்களை சமா்ப்பித்து கிசான் கடன் அட்டையினைப் பெற்று பயன் பெறலாம். விவசாயிகள், கால்நடை வளா்ப்பு, மீன்பிடி தொழில் போன்ற வேளாண்மை சாா்ந்த கூட்டுத் தொழில்கள் புரிவோா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com