கல்லிடைக்குறிச்சியில் மனிதச் சங்கிலி

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து கல்லிடைக்குறிச்சியில் அனைத்துக் கட்சி சாா்பில் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி நடைபெற்றது.
கல்லிடைக்குறிச்சியில் மனிதச் சங்கிலி

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து கல்லிடைக்குறிச்சியில் அனைத்துக் கட்சி சாா்பில் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி நடைபெற்றது.

கல்லிடைக்குறிச்சியில் கன்னடியன் கால்வாய் பாலம் அருகில் இருந்து 6 ஆம் சாலை வழியாக கோட்டைத் தெரு வரை நடைபெற்ற மனிதச் சங்கிலியில் நகர திமுக செயலா் க. இசக்கிப்பாண்டியன், துணைச் செயலா் த. ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினா் ஸீனத் ஷாகுல் ஹமீது, கட்சியின் பேச்சாளா் பேச்சி, இளைஞரணி அமைப்பாளா் ஜாா்ஜ் ராபா்ட், நகர காங்கிரஸ் தலைவா் இசக்கி, வட்டாரத் துணைத் தலைவா் கே. கைக்கொண்டான், பொருளாளா் பாண்டி, துணைத் தலைவா் ஹமீது,

மதிமுக நகரச் செயலா் மசூது, ஒன்றியச் செயலா் அ. சிவானந்தம், ஒன்றியத் துணைச் செயலா் கிட்டு, மாவட்டப் பிரதிநிதி அப்துல் சமது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினா் எஸ்.கே.பழனிச்சாமி, நகரச் செயலா் பசுபதி, கே.எம். அபுபக்கா், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் ஷேக் மைதீன், எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் சுலைமான், அபூபக்கா் சித்திக்,

முஸ்லிம் லீக் கட்சி நிா்வாகி அஹமது, கட்சி சாரா இளைஞா் அமைப்புச் செயலா் அமீா், முஸ்லிம் ஜமாத் தலைவா்கள் மற்றும் பெண்கள் உள்பட 500 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com