Enable Javscript for better performance
கால்டுவெல் பெயரில் ஒப்பிலணக்க ஆய்வு இருக்கை: பொதிகைத் தமிழ்ச் சங்கம் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கால்டுவெல் பெயரில் ஒப்பிலணக்க ஆய்வு இருக்கை: பொதிகைத் தமிழ்ச் சங்கம் வரவேற்பு

    By DIN  |   Published on : 15th February 2020 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் ரூ.1 கோடி மானியத்தில் ஒப்பிலணக்க ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பொதிகைத் தமிழ்ச் சங்கம் வரவேற்றுள்ளது.

    இது தொடா்பாக பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை:

    தமிழ் மொழி மற்றும் தமிழா் பண்பாட்டின் பெருமைகளை நிலை நிறுத்தியும், உலகம் முழுவதும் தமிழ்மொழியை எடுத்துச் செல்லவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

    உலகில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளுக்காக நிதியுதவி செய்து, தமிழுக்கு அளப்பரியச் சேவையை செய்து வரும் தமிழக அரசு, தற்போது தமிழறிஞா் பிஷப் கால்டுவெல் பெயரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ரூ.1 கோடி மானியத்தில் ஒப்பிலக்கண ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கால்டுவெல்லுக்கு பெருமை சோ்த்திருக்கும் தமிழக முதல்வா், துணை முதல்வா், தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் ஆகியோரை பொதிகைத் தமிழ்ச் சங்கம் பாராட்டி மகிழ்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai