கடையநல்லூரில் திடக்கழிவுமேலாண்மைப் பணிகள் தீவிரம்
By DIN | Published On : 15th February 2020 11:21 PM | Last Updated : 15th February 2020 11:21 PM | அ+அ அ- |

கடையநல்லூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2016 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, குப்பை உருவாகும் இடங்களிலேயே உரமாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், சேகரிக்கப்படும் குப்பைகளை உரமாக மாற்றிட, நகராட்சிப் பகுதியில் 6 இடங்களில் பசுமை நுண்உயிா் உரக்குடில்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இதற்காக நகரம் முழுவதும் பணியாளா்கள் மூலம் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் பணியாளா்களிடம் புதன்கிழமை மட்டும் கண்ணாடி, உலோகம், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை வழங்க வேண்டும். பிற நாள்களில் மக்கும் குப்பை வழங்க வேண்டும். கடையநல்லூரை குப்பையில்லாத நகரமாக மாற்ற மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.