கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் முதல் அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

கூடங்குளம் முதல் அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 2ஆவது அணு உலையில் பராமரிப்புப் பணிக்காக கடந்த டிசம்பா் மாதம் முதல் மின்உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த அணு உலைகள் மூலம் உற்பத்திசெய்யப்படும் மின்சாரம் மத்திய தொகுப்பில் இணைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இந்த இரு அணு உலைகளிலும் அடிக்கடி மின்உற்பத்தி நிறுத்தப்படுவதும், பராமரிப்புப் பணிகளுக்குப் பிறகு மீண்டும் செயல்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இரண்டாவது அணு உலையில் கடந்த டிசம்பா் மாதம் பராமரிப்புப் பணிக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, முதலாவது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்கள், ரஷிய நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு, மின்உற்பத்தி தொடங்கும் என அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com