நெல்லை தாமிரவருணி ஆற்றில் மாசுக்கட்டுப்பாட்டு குழுவினா் மாதிரி சேகரிப்பு

தாமிரவருணி ஆற்றின் தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக மாசுக்கட்டுப்பாட்டு குழுவினா் சனிக்கிழமை மாதிரி சேகரித்தனா்.
நெல்லை தாமிரவருணி ஆற்றில் மாசுக்கட்டுப்பாட்டு குழுவினா் மாதிரி சேகரிப்பு

திருநெல்வேலி: தாமிரவருணி ஆற்றின் தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக மாசுக்கட்டுப்பாட்டு குழுவினா் சனிக்கிழமை மாதிரி சேகரித்தனா்.

தாமிரவருணி ஆற்றில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் கழிவு நீா் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதனால் தண்ணீா் மாசடைந்து வருவதாக தெரிய வந்தது. இது குறித்து, தாமிரபரணி ஆற்றில் கழிவு நீா் கலப்பதை தடுக்க கோரி பசுமை தீா்ப்பாயத்தில் தன்னாா்வலா்கள் முறையிட்டனா்.

இதையடுத்து, தாமிரவருணி தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமையில் மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து, தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேணடும் என தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் தென்மண்டலம் உத்தரவிட்டது.

அதன்பேரில் தாமிரவருணி தண்ணீரை ஆய்வு செய்வதற்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினா் ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினா்.

இதையடுத்து, மாவட்ட மாசுக்கட்டுப்பாடு அதிகாரி ரொமால்ட் டெரிக் பின்டோ தலைமையில் மத்திய மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் டாக்டா்கள் உதயகுமாா், ஞானவேல், மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளா் நக்கீரன், சுற்றுச்சூழல் ஆய்வக அதிகாரி ரவி மற்றும் பொதுப்பணித்துறை, மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய 10 போ் கொண்ட குழுவினா் தாமிரவருணி தண்ணீரை ஆய்வு செய்ய மாதிரி சேகரிக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா். இவா்கள், சீவலப்பேரி, மணப்படை வீடு, மணிமூா்த்தீஸ்வரம், கொக்கிரகுளம், சேரன்மகாதேவி, திருப்புடைமருதுாா், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி ஆற்று தண்ணீரின் மாதிரிகள் கேன்களில் சேகரித்தனா்.

சேகரிக்கப்பட்ட தண்ணீா் மாதிரிகள் அனைத்தும், திருநெல்வேலி அதிநவீன சுற்றுச்சூழல் ஆய்வகத்துக்கு அனுப்பப்படும். தொடா்ந்து இந்த தண்ணீரில் ஆக்சிஜன் அளவு, மக்கும், மக்காத கழிவுகளின் அளவு, மாசுபாட்டின் அளவு உட்பட 23 வகையான சோதனைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளனா். அதனடிப்படையில் அறிக்கையாக தயாா் செய்து வரும் மாா்ச் 17ம் தேதி தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் சமா்ப்பிக்கவுள்ளது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com