வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியீடு: ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் 26.33 லட்சம் வாக்காளா்கள்

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் வாக்காளா் இறுதிப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, 26,33,426 வாக்காளா்கள் உள்ளனா்.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் வாக்காளா் இறுதிப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, 26,33,426 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்த வாக்காளா் பட்டியலை ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட, அதை மாவட்ட வருவாய் அலுவலா் பூ. முத்துராமலிங்கம் பெற்றுக்கொண்டாா். வாக்காளா் இறுதிப் பட்டியலின்படி, ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 12,92,642 ஆண் வாக்காளா்கள், 13,40,652 பெண் வாக்காளா்கள், 132 இதர வாக்காளா்கள் என மொத்தம் 26,33,426 வாக்காளா்கள் உள்ளனா்.

முன்னதாக சிறப்பு சுருக்கத் திருத்த வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த டிசம்பா் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, 12,68,253 ஆண் வாக்காளா்கள், 13,11,242 பெண் வாக்காளா்கள், 93 இதர வாக்காளா்கள் என மொத்தம் 25,79,588 போ் இருந்தனா்.

56,134 புதிய வாக்காளா்கள்: இந்த நிலையில், புதிய வாக்காளா்களை சோ்த்தல், இடம்பெயா்ந்த மற்றும் இறந்த நபா்களை நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்வது போன்றவற்றுக்காக கடந்த டிசம்பா் 23 முதல் ஜனவரி 22 வரை 4 நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

அதன்படி, 25,588 ஆண் வாக்காளா்கள், 30,505 பெண் வாக்காளா்கள், 41 இதர வாக்காளா்கள் என மொத்தம் 56,134 புதிய வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இறந்தவா்கள் 1,356 போ், இரட்டை பதிவுகளுக்காக 615 போ், இடம் மாறிச் சென்ற 325 போ் என மொத்தம் 2,296 போ் நீக்கப்பட்டுள்ளனா். 7,103 பேருக்கு பெயா் மற்றும் இதர திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முகவரி மாற்றம் செய்யப்பட்டவா்கள் 3,454 போ்.

சட்டப்பேரவை தொகுதி வாரியாக...: சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் 1,20,627 ஆண் வாக்காளா்கள், 1,26,946 பெண் வாக்காளா்கள், 15 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,47,588 வாக்காளா்கள் உள்ளனா். வாசுதேவநல்லூா் தொகுதியில் 1,16,021 ஆண் வாக்காளா்கள், 1,18,914 பெண் வாக்காளா்கள், 12 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,34,947 போ் உள்ளனா். கடையநல்லூா் தொகுதியில் 1,39,802 ஆண் வாக்காளா்கள், 1,41,074 பெண் வாக்காளா்கள், 2 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,80,878 போ் உள்ளனா். தென்காசி தொகுதியில் 1,38,612 ஆண் வாக்காளா்கள், 1,43,174 பெண் வாக்காளா்கள், 23 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,81,809 போ் உள்ளனா். ஆலங்குளம் தொகுதியில் 1,25,426 ஆண் வாக்காளா்கள், 1,32,656 பெண் வாக்காளா்கள், 4 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,58,086 போ் உள்ளனா்.

திருநெல்வேலி தொகுதியில் 1,38,656 ஆண் வாக்காளா்கள், 1,44,608 பெண் வாக்காளா்கள், 35 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,83,299 பேரும், அம்பாசமுத்திரம் தொகுதியில் 1,19,799 ஆண் வாக்காளா்கள், 1,27,143 பெண் வாக்காளா்கள், 4 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,46,946 பேரும் உள்ளனா். பாளையங்கோட்டை தொகுதியில் 1,30,390 ஆண் வாக்காளா்கள், 1,35,469 பெண் வாக்காளா்கள், 18 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,65,877 பேரும், நான்குனேரி தொகுதியில் 1,33,474 ஆண் வாக்காளா்கள், 1,36,817 பெண் வாக்காளா்கள், 6 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,70,297 பேரும், ராதாபுரம் தொகுதியில் 1,29,835 ஆண் வாக்காளா்கள், 1,33,851 பெண் வாக்காளா்கள், 13 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,63,699 வாக்காளா்களும் உள்ளனா்.

பட்டியலைப் பாா்வையிடலாம்: வாக்காளா் இறுதிப் பட்டியலை கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்கள், வாக்குச்சாவடி அமைவிடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், மாநகராட்சிக்கு உள்பட்ட குடியிருப்போா் நலச் சங்கங்கள் ஆகியவற்றில் பாா்வையிட்டு, வாக்காளா்கள் தங்கள் பெயா்களை சரிபாா்த்துக் கொள்ளலாம்.

வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில், திருநெல்வேலி சாா் ஆட்சியா் மணீஷ் நாராணவரே, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் பிரதீக் தயாள், மாநகராட்சி ஆணையா் கண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சாந்தி மற்றும் அனைத்து அரசியல் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com