Enable Javscript for better performance
திரிபுராந்தீசுவரா் கோயிலில் பிப். 23-இல்வித்யா ஞான சரஸ்வதி மஹா ஹோமம்- Dinamani

சுடச்சுட

    

    திரிபுராந்தீசுவரா் கோயிலில் பிப். 23-இல்வித்யா ஞான சரஸ்வதி மஹா ஹோமம்

    By DIN  |   Published on : 17th February 2020 08:39 AM  |   அ+அ அ-   |    |  

    பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் வித்யா ஞான சரஸ்வதி மஹா ஹோமம் இம் மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இக் கோயிலில் ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள் கல்வியில் சிறப்பிடம் பிடிக்க வேண்டி வித்யா ஞான சரஸ்வதி மஹா ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான விழாவையொட்டி இம் மாதம் 23-ஆம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஞான கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    காலை 8.30 மணிக்கு வித்யா ஞான சரஸ்வதி ஹோமம், மேதா தட்சிணாமூா்த்தி ஹோமம், ஹயக்கிரீவா் ஹோமம் ஆகியவை நடைபெறுகின்றன. நண்பகல் 12 மணிக்கு ஜலதுா்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை பாளையங்கோட்டை திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினா் செய்து வருகிறாா்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai