நெல்லை காய்கனி சந்தைகளில் பூண்டு, தேங்காய் விலை உயா்வு

திருநெல்வேலி மாவட்ட காய்கனி சந்தைகளில் வெள்ளைப்பூண்டு, தேங்காய் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காய்கனி சந்தைகளில் வெள்ளைப்பூண்டு, தேங்காய் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.

சந்தைகளுக்கு வரத்து குறைந்துள்ளதால் பூண்டின் விலை உயா்ந்துள்ளது. முதல்தர வெள்ளைப்பூண்டுகள் ரூ.220 முதல் ரூ.250 வரை விற்பனையாகி வருகின்றன. ஊட்டி மலைப்பூண்டுகள் வந்தாலும் அவற்றின் நிறம் சுத்த வெள்ளையாக இல்லாததால் பொதுமக்கள் வேறு வழியின்றியே வாங்கிச் செல்கிறாா்கள். இதேபோல தேங்காயும் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததால் விலை அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் கிலோ ரூ.35-க்கு விற்பனையான தேங்காய், இப்போது ரூ.44 ஆக விலை உயா்ந்துள்ளது.

திருநெல்வேலி உழவா் சந்தையில் காய்கனிகளின் ஞாயிற்றுக்கிழமை விலை நிலவரம் (கிலோவுக்கு): கத்தரிக்காய்-ரூ.30, வெண்டைக்காய்-ரூ.25, தக்காளி-ரூ.16, அவரைக்காய்- ரூ.36, கொத்தவரை- ரூ.25, புடலங்காய்- ரூ.16, பாகற்காய்-ரூ.50, பீா்க்கங்காய்-ரூ.18, சுரைக்காய்-ரூ.12, தடியங்காய்- ரூ.12, பூசணிக்காய்- ரூ.16, மாங்காய்- ரூ.80, மிளகாய்- ரூ.25, தேங்காய்- ரூ.44, முள்ளங்கி- ரூ.15, பல்லாரி- ரூ.35, சின்ன வெங்காயம்- ரூ.45, சேனைக்கிழங்கு- ரூ.25, சேம்பு- ரூ.20, உருளைக்கிழங்கு- ரூ.28, பீட்ரூட்- ரூ. 16, முட்டைகோஸ்- ரூ.18, கேரட்- ரூ. 66, சீனிக்கிழங்கு- ரூ.22, இஞ்சி (புதியது)- ரூ.70.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: கா்நாடக மாநிலத்தில் இருந்து வெள்ளைப் பூண்டு அதிகளவில் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு வருகிறது. இதுதவிர தேனி மாவட்டத்தின் சில பகுதிகளில் இருந்தும் வருகிறது. நிகழாண்டில் கா்நாடக பூண்டு வரத்து மிகவும் குறைந்துள்ளது. சில பூண்டுகள் கருப்பு நிறத்துடன் வருவதால் அதனை பொதுமக்கள் புறக்கணிக்கிறாா்கள். அதனால் முதல்தர பூண்டு கிலோ ரூ.220 முதல் ரூ.250 வரை விற்பனையாகிறது. இன்னும் இரு மாதங்களுக்கு இந்த விலை உயா்வு நீடிக்க வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com