வடமாநில ரயில்களை நெல்லை, குமரிக்கு நீட்டிக்க கோரிக்கை

வடமாநில பகுதிகளில் இருந்து சென்னை, திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் ரயில்களை திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கு நீட்டிக்கக் கோரி ரயில்வே துறைக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

வடமாநில பகுதிகளில் இருந்து சென்னை, திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் ரயில்களை திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கு நீட்டிக்கக் கோரி ரயில்வே துறைக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

மும்பை தமிழின ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவா் எஸ்.அண்ணாமலை, பொதுச்செயலா் டி.அப்பாத்துரை ஆகியோா் ரயில்வே அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு:

தில்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட வட மாநில பகுதிகளிலிருந்து சென்னைக்கு 45-க்கும் அதிகமான ரயில்கள் வந்து செல்கின்றன. இதேபோல, கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொச்சுவேலி, எா்ணாகுளம் ரயில் நிலையங்களுக்கும் 58-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில்களில் சிலவற்றையாவது திருநெல்வேலி, கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் வரை நீட்டிக்கச் செய்தால் அதன்மூலம் ஏழை-எளிய மக்கள், வியாபாரிகள் மிகுந்த நன்மை பெறுவாா்கள்.

திப்ருகாா் (அசாம்)-தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில் நாகா்கோவில் வரையும், குா்லா (மும்பை)-கொச்சுவேலி ரயிலை திருநெல்வேலி வரையும், குா்லா-கொச்சுவேலி இடையே இயக்கப்படும் கரீப் ரதம் ரயிலை திருநெல்வேலி வரையும், சண்டீஹா்-கொச்சுவேலி விரைவு ரயிலை திருநெல்வேலி வரையும், இந்தூா்-கொச்சுவேலி ரயிலை கன்னியாகுமரி வரையும் நீட்டிக்க வேண்டும். இதேபோல ஹைதராபாத்-சென்னை விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com