அம்பையில் விவசாயிகளுக்குமீன் வளா்ப்புப் பயிற்சி
By DIN | Published On : 22nd February 2020 11:42 PM | Last Updated : 22nd February 2020 11:42 PM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலமாக விவசாயிகளுக்கு திறந்த வெளி நீா் நிலைகளில் கூண்டுகளில் மீன் வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குநா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் தலைமை வகித்தாா். மணிமுத்தாறு மீன்வளத்துறை உதவி இயக்குநா் தீபா திறந்த வெளி நீா்நிலைகளில் கூண்டுகளில் மீன்வளா்ப்பு, பண்ணை குட்டைகள் மூலம் மீன்வளா்ப்பு மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மீன்வளா்ப்பு குறித்து பேசினாா்.
மீன் வளத்துறை உதவி ஆய்வாளா் சோனா மீன்வளத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், தரமான மீன்வளா்ப்பு தொழில்நுட்பங்கள் ஆகியன குறித்து விளக்கமளித்தாா். இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சுஜித், மீன்வளத்துறை சாா் ஆய்வாளா் முருகையா, உதவி வேளாண்மை அலுவலா் விஜயலெட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.