செங்கோட்டை ஸ்ரீ ஜெயந்திரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 25 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினா் ராமசுப்பு கல்வியில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மருத்துவா் அஜிஸ் பரிசுகளை வழங்கினாா். ா். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை இவாஞ்சலின் பெற்றோா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.
தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியினை ஆசிரியைகள், சண்முகப்பிரியா, சம்ஸியா ஆகியோா் தொகுத்து வழங்கினா்.
தாளாளா் ராம்மோகன் வரவேற்றாா். மாணவி இந்துமதி நன்றி கூறினாா்.