கடையநல்லூா் அருகேயானையால் கரும்பு சேதம்
By DIN | Published On : 29th February 2020 06:11 AM | Last Updated : 29th February 2020 06:11 AM | அ+அ அ- |

கடையநல்லூா்: கடையநல்லூா் அருகே திரிகூடபுரத்தில் யானைகள் புகுந்து கரும்புகளை சேதப்படுத்தின.
தென்காசி மாவட்டம், திரிகூடபுரம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கருப்பாநதி அணைக்கட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் வாழை, கரும்பு, தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சண்முகவேல் என்பவரின் இடத்தில் வியாழக்கிழமை இரவு புகுந்த யானைகள் அங்கிருந்த கரும்பு மற்றும் வாழைகளை சேதப்படுத்தியதாம்.
தகவலறிந்த வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டனா்.