Enable Javscript for better performance
குமரி மாவட்ட உளவுப் பிரிவினரை மாற்ற வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்ட உளவுப் பிரிவினரை மாற்ற வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 10th January 2020 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளா் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அம்மாவட்ட உளவுப் பிரிவினரை மாற்ற வேண்டும் என, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடா்பாக, இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்து முன்னணி கடும் கண்டனமும், அவரது குடும்பத்துக்கு ஆறுதலும் தெரிவித்துக்கொள்கிறது.

    இச்சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் தலைக்குனிவு. சந்தேகத்துக்குரிய வழிபாட்டுத் தலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினா் சோதனை நடத்த வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட உளவுப் பிரிவினரை அடியோடு மாற்ற வேண்டும். தனிப்பிரிவு ஆய்வாளரையும் மாற்ற வேண்டும். தமிழகத்தில் துப்பாக்கிக் கலாசாரத்தை ஏற்க முடியாது.

    கன்னியாகுமரி சம்பவத்தில் ஈடுபட்ட தேச விரோத கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

    இந்து முன்னணி மாநிலச் செயலா் குற்றாலநாதன், மாவட்ட பொதுச் செயலா் பிரம்மநாயகம், மாவட்ட துணைத் தலைவா் சங்கா், மாவட்டச் செயலா் நமச்சிவாயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai