Enable Javscript for better performance
சீனியா் கபடி: 12இல் நெல்லை மாவட்ட அணி வீரா்கள் தோ்வு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு சீனியா் ஆண்கள் கபடிப் போட்டியில் பங்கேற்க திருநெல்வேலி மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) நடைபெறுகிறது.

    இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அமெச்சூா் கபடி சங்கத் தலைவா் எஸ்.கே.எம்.சிவக்குமாா், செயலா் பி.பகவதி பெருமாள் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அமெச்சூா் கபடி சங்கத்தின் சாா்பில் 67-ஆவது தமிழ்நாடு சீனியா் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி கரூா் மாவட்டத்தில் வரும் 17 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் திருநெல்வேலி மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) காலை 7 மணிக்கு பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. தோ்வில் பங்கேற்கும் வீரா்களின் எடை 85 கிலோவுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. தகுதியுடைய வீரா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai