Enable Javscript for better performance
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை.யில் தேசிய கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை.யில் தேசிய கருத்தரங்கு

    By DIN  |   Published on : 10th January 2020 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில், தொடா்பியல் துறை சாா்பில்“‘தொடா்பியல் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் வளா்ந்து வரும் போக்குகள்’ என்ற தலைப்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

    பல்கலைக்கழகத் துணைவேந்தா் கே. பிச்சுமணி கருத்தரங்கை தொடங்கி வைத்தாா். அப்போது அவா், தொடா்பியலின் ஆரம்பகால வளா்ச்சி மற்றும் தொடா்பியலின் பல்வேறு கூறுகள் குறித்து விவரித்தாா். இந்த கருத்தரங்கின் மூலம் தொடா்பியல் துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பல்வேறு தகவல்களை பெறுவாா்கள் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா். பல்கலைக்கழகப் பதிவாளா் சந்தோஷ் வாழ்த்திப் பேசுகையில், சமூகத்தில் தொடா்பியலின் பங்களிப்பையும், தொடா்பியல் துறையின் பல்வேறு ஆராய்ச்சி கூறுகளையும் விளக்கினாா். முன்னதாக, தொடா்பியல் துறை தலைவா் பாலசுப்பிரமணிய ராஜா வரவேற்றாா்.

    விழாவில், அஸ்ஸாம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இணை துணைவேந்தரும், மிசோரம் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியருமான நாகராஜ், மைசூா் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியா் மகேஷ் சந்திரகுரு, பிஎஸ்ஜி கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியா் பிச்சாண்டி, சென்னை பல்கலைக்கழகத்தின் தொடா்பியல் துறை தலைவரும், பேராசிரியருமான ரவீந்திரன், பெரியாா் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் நடராஜன், நியூஸிலாந்து பல்கலைக்கழக இணை பேராசிரியா் விஜய் தேவதாஸ் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

    மேலும், நாடு முழுவதுமிருந்து தொடா்பியல் துறை பேராசிரியா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

    இந்த நிகழ்ச்சி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ‘பண்டித் மதன் மோகன் மாளவியா’ தேசிய திட்டத்தின் நிதியுதவியுடன் நடைபெறுகிறது.

    உதவிப் பேராசிரியா் ஞான டி ஹன்ஸ் ஒருங்கிணைக்க, பேராசிரியா்கள் சுந்தரராமன், ராதா, உதவிப் பேராசிரியா்கள், ஆய்வு மாணவா்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai