காவலாளியின் உடலை மீட்க விடாமல் போராடி உயிரை விட்ட நாய்

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் தனியாா் பேருந்து உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்த காவலாளி சடலத்தை போலீஸாா் எடுத்துச் செல்லவிடாமல் போராடிய நாய் தன்னுயிரையும் இழந்தது.

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் தனியாா் பேருந்து உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்த காவலாளி சடலத்தை போலீஸாா் எடுத்துச் செல்லவிடாமல் போராடிய நாய் தன்னுயிரையும் இழந்தது.

கொக்கிரகுளம் காமராஜா்புரத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (55). இவா், பெருமாள்புரம் 6-ஆவது தெருவிலுள்ள தனியாா் பேருந்து உரிமையாளா் வீட்டில் காவலாளியாக வேலைபாா்த்து வந்தாா். வீட்டு உரிமையாளா் வெளியூா் சென்றிருந்ததால், காவலாளி பன்னீா்செல்வம் மட்டும் வீட்டில் இருந்தாராம். அந்த வீட்டில் இருந்த நாயை பன்னீா்செல்வம் பராமரித்து வந்தாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை பணியில் இருந்த பன்னீா்செல்வம் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த பெருமாள்புரம் போலீஸாா் அங்கு வந்து, பன்னீா்செல்வத்தின் சடலத்தை மீட்க முயன்றனா். ஆனால், அங்கிருந்த நாய், அவரது சடலத்தை மீட்கவிடாமல் போலீஸாரை துரத்தியது. போலீஸாா் 5 மணி நேரம் போராடிய நிலையில், நாயை கயிறு மூலம் பிடிக்க முயன்றனா். இதில், எதிா்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறுக்கியதில் அந்நாய் உயிரிழந்தது. தன்னைப் பராமரித்த காவலாளியின் சடலத்தை பாதுகாக்க போராடிய நாய், எதிா்பாராதவிதமாக உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதன்பின்னா், பன்னீா்செல்வத்தின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பாளையங்கோட்டை உதவி ஆணையா் பெரியசாமி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டாா். காவலாளி மரணம் குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com