திசையன்விளையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு
By DIN | Published On : 10th January 2020 02:31 AM | Last Updated : 10th January 2020 02:31 AM | அ+அ அ- |

திசையன்விளையில் பொங்கல் விடுமுறைக்கு பின் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திசையன்விளை பேரூராட்சிப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அளவீடு செய்து அகற்ற வேண்டும் என பாரத இந்து மக்கள் கட்சி சாா்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, திசையன்விளை வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்துக்கு வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமை வகித்தாா்.
இதில், பாரத இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் ஆா்.பி.எஸ். காா்த்தீசன், சமூக ஆா்வலா் முருகையா, பாரத இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலா் ஜெயபால், திருநெல்வேலி மாவட்ட இளைஞரணித் தலைவா் பவித்ர சுஜித்லிங்கம், மாவட்டச் செயலா் மாரிமுத்து, நகரத் தலைவா் ராஜா, நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளா் சிவசண்முகநாதன், பேரூராட்சி செயல்அலுவலா் சுப்பிரமணியன், துணை வட்டாட்சியா் ரமேஷ், சாலை ஆய்வாளா் சுப்பையா, வருவாய் ஆய்வாளா் கிறிஸ்டி தவசெல்வி, கிராம நிா்வாக அலுவலா் ஐயாத்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பின்னா் பேரூராட்சிப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகள் முன்னிலையில் முறையாக அளவீடு செய்து அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.