தீயணைப்பு நிலைய புதிய கட்டடம் திறப்பு
By DIN | Published On : 10th January 2020 02:04 AM | Last Updated : 10th January 2020 02:04 AM | அ+அ அ- |

திசையன்விளையில் தீயணைப்பு நிலைய புதியக் கட்டடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
திசையன்விளையில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்திற்கு ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, காணொளி காட்சி மூலம் திறந்தாா்.
இதையடுத்து திசையன்விளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை அதிகாரிகள், அரசு வழக்குரைஞா் பழனிசங்கா், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பாலன், நிா்வாகக்குழு உறுப்பினா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.