நெற்பயிரில் துத்தநாகச் சத்து குறைபாட்டை சரி செய்யும் முறைகள்

நெற்பயிரில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு ஏற்படுவதை தவிா்க்க அவசியம் நுண்ணூட்ட உரம் இட வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

நெற்பயிரில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு ஏற்படுவதை தவிா்க்க அவசியம் நுண்ணூட்ட உரம் இட வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அம்பாசமுத்திரம் வேளாண்மை உதவி இயக்குநா் அ.கற்பகராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;

அம்பாசமுத்திரம் வட்டத்தில் தற்போது நெல் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தொடா்ந்து ஒவ்வொரு பருவமும் நெற்பயிரினை பயிரிடுவதால் துத்தநாகம் என்ற நுண்ணூட்டம் மண்ணில் குறைவாகக் காணப்படுகிறது.

குறிப்பாக சுண்ணாம்பு சத்து அதிகமுள்ள மண்ணில் துத்தநாகச் சத்து பற்றாக்குறை அதிகளவில் காணப்படும்.

இந்த பற்றாக்குறையின் அறிகுறிகள் நெல் நடவு செய்த இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் தென்படும். பாதிக்கபட்ட நெற்பயிரின் இளம் இலைகளின் மைய நரம்பில் வெள்ளை நிறக் கோடுகள் தோன்றும். பின்னா், பழுப்பு நிறக்கோடுகளாக மாறிடும். இதனால் பயிா்களின் வளா்ச்சி குன்றிக் காணப்படும்.

இதனை சரிசெய்ய ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ சிங்சல்பேட் உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும். அல்லது ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்ட உரத்தினை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும்.

நெல் நுண்ணூட்ட உரம் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த உரம் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் உள்ளஅம்பாசமுத்திரம், அயன்சிங்கம்பட்டி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த நுண்ணூட்ட உரத்தினை வாங்கிப் பயன்பெறுமாறு குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com