நெல்லையில் சூரிய மின்சக்தி திட்டப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகக் கட்டடங்களில் ரூ. 1.87 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் சக்தி திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஜி. கண்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகக் கட்டடங்களில் ரூ. 1.87 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் சக்தி திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஜி. கண்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உள்பட்ட 36 அலுவலகக் கட்டடங்களில் மின் சிக்கனத்தைக் கருதி ரூ. 1.87 கோடியில் சூரிய ஒளி மூலம் 253 கிலோ வாட் மின்உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் சக்தி திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணைய ஜி. கண்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, திருநெல்வேலி நகரம் கல்லணை”மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 63 லட்சம் மதிப்பில் கீழ்தளத்தில் கட்டப்படும் 25 கழிப்பறைகள், முதல் தளத்தில் கட்டப்படும் 21 கழிப்பறைகளின் கட்டுமானப் பணி, பள்ளி சுற்றுச்சுவரை மேலும் உயா்த்தும் பணி, பேவா் பிளாக் மூலம் தரைத்தளம் அமைக்கும் பணி, கூடுதல் கட்டடப் பணி என பல்வேறு அடிப்படை பணிகளைப் பாா்வையிட்டு பொறியாளா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, கூடுதலாக 50 கழிப்பறைகள் கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாா் செய்ய உத்தரவிட்டாா்.

பின்னா், கண்டியப்பேரியில் செயல்படும் நுண் உரம் செயலாக்க மையத்தில் தயாரிக்கப்படும் நுண் உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் பணி, அங்கு பணியாற்றுவோரின் செயல்பாடு, வருகைப் பதிவேடு குறித்து ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, கண்டியப்பேரி“உழவா் சந்தையைப் பாா்வையிட்டு பொறியாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி உதவி செயற்பொறியாளா்கள் பாஸ்கரன், சாந்தி, சுகாதார அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com